சனி, ஆகஸ்ட் 18, 2012

தினகரன் செல்லையா - சிட்னி ஆஸ்திரேலியா நகரிலிருந்து

எங்கள் கிராமத்தை பற்றி உலகிற்கு பகிர்ந்து கொண்டதில் இணைய குழுவின் பணிவான நன்றிகள்.


I have visited your web site.It was an amazing experience in total.I found surprise in each page and each tab i pressed.
Being in Sydney i never come across any village like this even in developed countries.
I would like to visit Kasangadu during my next visit to India.(in Jan 2013)
I would like to discuss with all group members and individuals contributed such massive work.
Please let me know to whom i should contact for future communications?.I would like to discuss about all your experience and implementation about web page and the real developmental activities took place within "Kasangadu" 
 
I have alraedy forwarded the link to all my friends and groups known to me.
I am also interested to high light and focus 'Kasangadu' where ever i get opportunity.
 
Good work Keep Going!

தினமலரில் பகிர்ந்து கொண்ட தகவல்கள்: (வாசகரின் கருத்துக்கள் பகுதியில்)


சிவலிங்காபுரம் பற்றி அறிந்து சந்தோசம். சிவலிங்காபுரம் போன்று ஒற்றுமையான ஒருகிராமம் பற்றி தினமலர் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.அதுதான் காசாங்காடு என்கிற கிராமம்.இந்த கிராமம் பற்றி www.kasangadu.com எனும் இணையத்தளத்தில் நுழையும்போது நீங்களும் என்னைப் போல் ஆச்சர்யப்படுவீர்கள், வியந்துபோவீர்கள், சந்தோசப்படுவீர்கள். எத்துனையோ ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஊரில் மதுக்கடை,கள்ளுக்கடை இல்லை,சிகரெட்,பீடி,புகையிலை விற்பனை இல்லை.கட்சிக்கொடி இல்லை.கட்சி சம்பந்தமான சுவரொட்டி இல்லை.கட்சித் தலைவர்களின் சிலை ஏதும் இல்லை. இப்படியும் ஒரு கிராமம் உண்டுமா? இப்படிபட்ட இணையத்தளம் உள்ளடக்கிய விடயங்கள் வேறு எந்த ஊருக்காவது உண்டா?. www.kasangadu.com/proud மேலுள்ள இணையதளத்தின் பக்கங்களைப் புரட்டும்போது என்னைப்போன்று வியந்து போவீர்கள். ஒவ்வொரு பக்கமும் வியப்பையும் ஆச்சர்யத்தையும் அளிக்கிறது. உதாரணத்திற்கு சில: - காசாங்காடு கிராமத்தில் தினசரி தட்பவெட்ப நிலை(minimum /max ), ஈரப்பதம், காற்றின் அழுத்தம் அறிந்துகொள்ள முடிகிறது. - காசாங்காடு கிராமத்திலிருந்து இந்திய தேசிய இராணுவத்தில் (INA) பணிபுரிந்த மாவீரர்களைப்பற்றி விபரம் - காசாங்காடு கிராமத்தைச் சேர்ந்த மாணவரின் கண்டுபிடிப்பு மற்றும் pattent விபரம் - காசாங்காடு கிராம பஞ்சயாத் தலைவர்கள் முதல் ஊழியர்கள் வரை - காசாங்காடு கிராம வளர்ச்சிக்கு பாடுபட்ட பெரியவர்கள் - காசாங்காடு கிராமத்திலுள்ள பள்ளிகள் மற்றும் அதன் வரலாறு - காசாங்காடு மக்களின் வெளிநாட்டு பயண அனுபவங்கள் -ஊரில் நடந்த கோயில் விழாக்கள், சமீபத்தில் யாருக்கு அந்த ஊரில் பிறந்தநாள்? முதல் அன்றாடம் காசாங்காட்டில் நடக்கும் அணைத்து தகவல்கள் - விவசாய முறை மற்றும் தொழில்நுட்பம் - காசாங்காடு சமையல் - காசாங்காடு பஞ்சாகம் - புள்ளி விபரம் (2001 ஆம் ஆண்டு கணக்கின்படி மொத்த ஜனத்தொகை ஐயாயிரம் கூட இல்லை) - காசாங்காடு திருவிழா, கோயில், நூலகம், விளையாட்டு அரங்கம்,குளம்,கூட்டுறவு பண்டகசாலை பற்றிய தகவல்கள் - காசாங்காடு கிராமத்தின் தேவைகள் (டிஜிட்டல் நூலகம்,ATM வசதி,Medical Insurace ,Solar panel supplier etc ) இன்னும் எத்தனையோ செய்திகள். இந்த இணையத்தளத்தில் உள்ள ஒவ்வொரு tab அழுத்தும் போதும் வியக்கத்தக்க செய்திகளையும், நுணுக்கமான தகவல்களையும் காண முடிகிறது. பல வகையில் "காசங்காடு" மாதிரி கிராமமாக விளங்குவதைக் கண்டு மனம் மகிழ்ச்சியடைகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட இப்படியொரு கிராமம் உள்ளதா என்பது சந்தேகமே. காசாங்காடு கிராம வளர்ச்சிக்காக பாடுபட்ட அணைத்து உள்ளங்களையும் வாழ்த்துகிறேன், வணங்குகிறேன். காசாங்காடு கிராமம் இணையதளத்தில் காணும் ஒரு வார்த்தை" காச்சங்காடு மட்டுமன்றி உலகமே முன்னற்றம் அடைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என்பது ஆகும். இது இந்த கிராம மக்கள் அனைவரும் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" எனும் கணியன் பூங்குன்றனாரின் பாடலின் அர்த்தம் உணர்ந்தவர்கள் என்பதை பறை சாற்றுகிறது. தினமலரில் சிறப்புச் செய்தியாக "காசாங்காடு" கிராமம் விரைவில் வெளிவரும் என நம்புகிறேன். இணைய தள முகவரி www.kasangadu.com சிவலிங்காபுரம், காசாங்காடு போன்று வேறு கிராமங்கள் இருப்பின் தயவு செய்து பகிர்ந்து கொள்ளவும்.